மனித கழிவுகளை அகற்றும் போது உயரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது-ப.சிதம்பரம்

Default Image

தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் போது 1993ம் ஆண்டு முதல் 15 மாநிலங்களில் மொத்தம் 620 பேர் உயிரிழந்துள்ளதாக சபாயி கர்மசாரி அந்தோலன் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது .தமிழகத்தில் மட்டும்  144  பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144 ஆகும். மனித கழிவுகளை அகற்றும் போது உயரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது . மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்