முதல்வர் பிரதமரை சந்திப்பது மகிழ்ச்சி…! உறுதியாக வெற்றியுடன் திரும்புவார்…! – செல்லூர் ராஜு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயனை சந்தித்து மனு அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய செல்லூர் ராஜு அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு நடத்த மாட்டோம் எனக் கூறினார். இந்த விஷயத்தில் உறுதியாக வெற்றி பெற்று திரும்புவார் என நம்புகிறேன். 7 பேரை நாங்கள் விடுதலை செய்வோம்என்று கூறினார். இந்த விஷயத்தில் எங்களை கேலி செய்தார். இதிலும் வெற்றியுடன் திரும்புவார்.
தமிழகத்திற்கு அதிகமான தடுப்பூசியை பெற்று வருவார் என்றும், அதிகமான நிதியை அவர் பெற்று வருவதோடு, ஒரு மாவீரனாக அவர் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.