ஒன்றிய அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகமே…! – அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி போட்ட உத்தரவை திரும்பப் பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆளுநரின் இந்த செயல்பாடு குறித்து அரசியல் தலைவர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி போட்ட உத்தரவை திரும்பப் பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இது விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகமே…!’ என பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி போட்ட உத்தரவை திரும்பப் பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இது விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகமே…!#Governor
— Mano Thangaraj (@Manothangaraj) June 30, 2023