மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்வளையை நெரிப்பதுபோல, அவர்களது பேச்சுரிமை,கருத்துரிமையை பறிப்பது எவ்வகையிலும் ஜனநாயகத்திற்குகந்ததல்ல கீ.வீரமணி ட்வீட்.
மாநிலங்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய நிலையில், இதுவரை 20-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் கீ.வீரமணி, ‘நமது இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பீடிகை இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்றே கூறப்பட்டுள்ளநிலையில், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்வளையை நெரிப்பதுபோல, அவர்களது பேச்சுரிமை,கருத்துரிமையை பறிப்பது எவ்வகையிலும் ஜனநாயகத்திற்குகந்ததல்ல.
இப்போதுள்ள இரண்டாம் முறை பிரதமர் மோடி ஆட்சி, அதிகப் பெரும்பான்மை பெற்றதன் (ரோடு ரோலர் மெஜாரிட்டி என்பார்கள்) காரணமாக ஜனநாயக உரிமைகள் நாளும் பறிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டம் அளித்த உறுதிமொழிகள் பறிபோகும் பரிதாபம் ஏற்பட்டு வருகின்றது.
எடுத்துக்காட்டாக மூன்று ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் துணை சபாநாயகர் பதவி (டெபுடி ஸ்பீக்கர்) இன்னமும் காலியாகவே இருக்கிறது; மரபு முறைப்படி எதிர்க்கட்சியினருக்கு அளிக்கப்பட்டு வரும் முறைக்கும் விடை கொடுக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று (26.7.2022) மாநிலங்களவை உறுப்பினர்கள் பலரும் இத்தொடர் நிகழ்வில் ஒரு வாரம் கலந்துகொள்ளக்கூடாது என்று இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்பதால், அம்முடிவினை மறுபரிசீலனை செய்து, ஜனநாயகம் நிலைநாட்டி, சர்வாதிகாரம் கொடியேற்றப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டியது அனைத்து மக்களின் கடமையாகும்.’ என பதிவிட்டுள்ளார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…