இளையராஜாவை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது – விஜயகாந்த்
இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து & கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு, மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என விஜயகாந்த் ட்வீட்
இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்க்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் பெருகி வரும் நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார். இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து & கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு, மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது.’ என பதிவிட்டுள்ளார்.
இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார்.
இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து & கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு, மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது. pic.twitter.com/9xiDWoia2I— Vijayakant (@iVijayakant) April 19, 2022