வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து சசிகலா கூறுகையில் வேளாண் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது நல்ல விஷயம்தான் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கன மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் கனமழையால் பெரும் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பெசன்ட் நகரில் உள்ள ஊரூர் குப்பம், அடையாறு, இந்திரா நகர், ஐஸ்வர்யா காலனி, நீலாங்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நகர், ராஜேந்திரன் நகர், பாரதி நகர், தரமணி சிக்னல், வேளச்சேரி, டாக்டர் அம்பேத்கர் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சசிகலா அவர்கள் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த பருவமழை காலகட்டத்தில் அரசு சரிவர செயல்படவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசு காப்பாற்ற வேண்டும். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். மேலும் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளது.
அப்பகுதி விவசாயிகள் மிகவும் துன்பத்தில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். மேலும் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து கூறுகையில் வேளாண் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது நல்ல விஷயம்தான் என்று தெரிவித்தார்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…
சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…