வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி தான், இல்லாத ஒன்றிற்கு இருவர் சண்டை போடுகிறார்கள் – முத்தரசன்!

Default Image

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி தான், இல்லாத ஒன்றிற்கு இருவர் சண்டை போடுகிறார்கள் என முத்தரசன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் முத்தரசன் அவர்கள் நேற்று தஞ்சையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டியில், உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பிரதமரும் முதல்வரும் மௌனம் காப்பது கண்டனத்துக்கு உரியது எனவும், பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய காரணத்தால் பாஜக ஆணவத்துடன் நடந்து கொள்வது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை எனவும் கூறியுள்ளா. விவசாயிகள் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் வருகிற 12-ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் இல்லாத ஒன்றுக்கு சண்டை இடுவதாகவும் வருகிற சட்டமன்ற தேர்தல் அதிமுக தோல்வியைத்தான் தழுவும் எனவும் கூறியுள்ளார். அதிமுகவுக்கு இடையில் உள்ள பிரச்சினை எப்படி உருவானது? எப்படி முடியும்? என்பதும், முதல்வர் வேட்பாளர்  குறித்த காரசார விவாதத்தையும் பாஜகவிடம் தான் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்