ஆப்பிள் உதிரிபாக நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா.? உண்மை நிலவரம்…

Chennai Foxconn Pvt ltd

சென்னை: ஆப்பிள் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான ஃ பாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு எந்தவித பாகுபாடும் பார்க்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பிரபல செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு வேலை, ஊதியம், பதவி உயர்வு ஆகியவற்றில் பாரபட்சம் பார்க்கப்டுகிறது என குற்றசாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றசாட்டுகளை அடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) , ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பணி நியமனம் குறித்த உண்மை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது

இந்த உத்தரவை அடுத்து, சென்னை மண்டல தொழிலாளர் ஆணையர் தலைமையில், 5 பேர் கொண்ட தொழிலாளர் துறை அதிகாரிகள் குழு ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு பணிபுரியும் 21 திருமணமான பெண் ஊழியர்களிடம் முழுமையான விசாரணையை இந்த குழு மேற்கொண்டது.

ஆய்வின் முடிவில், அனைத்து ஊழியர்களும் ஊதியம் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பாக எந்தவிதமான பாரபட்சத்தையும் சந்திக்கவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும், பாரபட்சம் காட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்