#Breaking:வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து கணக்கெடுப்பு – தமிழக அரசு முடிவு!

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் நமது தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் பணி புரிந்தும்,வாழ்ந்தும் வருகின்றனர்.அவ்வாறு,உலகம் முழுவதும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நலனுக்காக,புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று கடந்த அக்டோபர் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில்,வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு,தமிழ்நாடு அரசின் மறுவாழ்வு & தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர் நல ஆணையரகம் சார்பாக ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள் விழாவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025