அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை அடுத்து மீனவர் ராஜாவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக வனத்துறையால் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் மீனவர் ராஜாவின் உடல் நேற்று ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பாலாறு தேங்கும் காவேரி ஆற்றங்களரையில் உடல் உப்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவரின் உடலானது நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடலை வாங்க மறுப்பு : இந்நிலையில், மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறையினர் சுட்டனர். இதனால், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசு தரப்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து ராஜாவின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் நேற்று ராஜாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை : மீனவர் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய விருப்பமில்லை எனவும், புகார் அளிக்க மாட்டோம் எனவும் கூறியதால், நேற்று ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை. இந்நிலையில் இன்று சேலம் மாவட்ட எஸ்பி சிவகுமார் , கோட்டாட்சியர் தணிகாசலம், வட்டாச்சியர் சதாசிவம் ஆகியோர் மீனவர் ராஜாவின் மனைவியோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்மதம் : இந்த பேச்சுவார்த்தையின் போது, பிரேத பரிசோதனையானது முழுதாக வீடியோ எடுக்க வேண்டும் எனவும், தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவர் அங்கே இருப்பார் எனவும் கோரிக்கை வைக்கப்ட்டு இருந்தது அதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து உடலை வாங்க மீனவர் ராஜா குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர்.
கோரிக்கைகள் : மேலும், சுட்டுக்கொன்ற கர்நாடக காவல் துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், கர்நாடக காவல்துறையில் இருந்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்று தரவேண்டும் எனவும் ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்ததது என தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…