மீனவர் ராஜா மனைவியுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை.! உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்.!

Default Image

அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை அடுத்து மீனவர் ராஜாவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக வனத்துறையால் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் மீனவர் ராஜாவின் உடல் நேற்று ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பாலாறு தேங்கும் காவேரி ஆற்றங்களரையில் உடல் உப்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.  இறந்தவரின் உடலானது நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உடலை வாங்க மறுப்பு : இந்நிலையில், மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறையினர் சுட்டனர். இதனால், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசு தரப்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து ராஜாவின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் நேற்று ராஜாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை : மீனவர் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய விருப்பமில்லை எனவும், புகார் அளிக்க மாட்டோம் எனவும் கூறியதால், நேற்று ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை. இந்நிலையில் இன்று சேலம் மாவட்ட எஸ்பி சிவகுமார் , கோட்டாட்சியர் தணிகாசலம்,  வட்டாச்சியர் சதாசிவம் ஆகியோர் மீனவர் ராஜாவின் மனைவியோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்மதம் : இந்த பேச்சுவார்த்தையின் போது, பிரேத பரிசோதனையானது முழுதாக வீடியோ எடுக்க வேண்டும் எனவும், தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவர் அங்கே இருப்பார் எனவும் கோரிக்கை வைக்கப்ட்டு இருந்தது அதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து உடலை வாங்க மீனவர் ராஜா குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர்.

கோரிக்கைகள் : மேலும், சுட்டுக்கொன்ற கர்நாடக காவல் துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், கர்நாடக காவல்துறையில் இருந்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்று தரவேண்டும் எனவும்  ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்ததது என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்