சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் கேலரி.! முதல்வர் விழாவில் எம்.எஸ்.தோனி பங்கேற்பு.!
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதியதாக கட்டமைப்பட்டுள்ள கேலரிக்கு கலைஞர் கேலரி எனும் பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் கூடுதல் இருக்கைகள் கொண்டு புதிய கேலரி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் முடிந்து இந்த ஐபிஎல் போட்டிக்காக புதுப்பொலிவுடன் திறக்கப்பட உள்ளது.
கலைஞர் கேலரி :
தற்போது உருவாக்கப்ட்டுள்ள புதிய கேலரிக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டு ‘கலைஞர் கேலரி’ எனும் பெயருடன் அழைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மு.க.ஸ்டாலின் – எம்.எஸ்.தோனி :
மேலும் , இந்த கலைஞர் கேலரியை வரும் 17ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் எனவும், அந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கலந்துகொள்ள உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுளளது.
முதல் போட்டி :
இதனை அடுத்து , புதுப்பிக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், முதல் போட்டியாக அடுத்த மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியினை எதிர்கொள்ள உள்ளது.