புத்தம் புது பொலிவு பெரும் ராமேஸ்வரம் ரயில் நிலையம்.! ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.!

Default Image

ராமேஸ்வர ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.90 கோடியே 20 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் மிக முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்குகிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம். இங்கு இந்தியா முழுவதும் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் ஆன்மீக பயணமாகவும் , சுற்றுலா பயணிகளும் வருவார்கள்.

ராமேஸ்வரம் ரயில் நிலையம் :

அப்படி புகழ் பெற்ற ராமேஸ்வரத்தில் உள்ள ரயில் நிலையத்தை மேம்படுத்த்தும் பணியில் தற்போது ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதன் படி, ராமேஸ்வர ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.90 கோடியே 20 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 மாதங்கள் :

இதன் மூலம், ராமேஸ்வர ரயில் நிலையத்தில் நகரும் மின் படிக்கட்டுகள், லிஃப்ட் , ஓய்வறைகளும் அமைக்கப்பட உள்ளன எனவும், இதற்கான பணிகளை அடுத்த 18 மாதங்களில் நிறைவேற்றி முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.

சுத்தீகரிப்பு நிலையம் : 

ராமேஸ்வர ரயில்நிலைய மேம்பாடு பணியை மேற்கொள்ள கோவை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும், ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அது பற்றிய விவரங்கள் பின்னர் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்