#Breaking:உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்!
உக்ரைன்-ரஷ்யா இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்ற மாணவர் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய மாநில அரசுகள் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் விமான பொறியியல் படித்து வருகிறார்.இந்த நிலையில்,அவர் உக்ரைனின் ஜார்ஜியன் நேஷனல் லிஜியன் என்ற துணை ராணுவத்தில் இணைந்திருப்பதாக உளவுத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் துணை ராணுவத்தில் சாய் இணைந்திருப்பது வேதனை அளிப்பதாகவும்,அவரை மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,அவரது பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,சாயின் வீட்டிற்கு நேரடியாக சென்று அதிகாரிகள் நடத்திய விசாரணையில்தான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,தனது சிறுவயதிலிருந்தே சாய் நிகேஷ் ராணுவத்தில் சேர விருப்பப்பட்டதாகவும்,ஆனால்,உயரம் குறைவு காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும்,இந்த நிலையில்,அவர் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.