திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மட்டுமின்றி அவருடைய உடலை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் எரித்தது சர்ச்சையாகியது.நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பல இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நேற்று திமுக எம்பி கனிமொழி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இந்நிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி,சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட பிரிவின் கீழ் இவ்வழக்கு கனிமொழி உள்பட 191 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…