கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் சிறுமிகள் இந்தியாவில் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் பல்வேறு எழுத்துபூர்வமான கேள்விகளுக்கு அந்ததந்த துறை மத்திய அமைச்சகம் பதில் அளித்து வருகிறது. அதன் படி, இந்தியாவில் காணாமல் போன பெண்கள் சிறுமிகள் பற்றிய தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2019 முதல் 2022 வரையில் இந்தியாவில் மொத்தமாக 13.13 லட்சம் பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் என தேசிய குற்ற ஆவண அறிக்கைபடி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10.60 லட்சம் பெண்கள் என்றும், 5.51 லட்சம் வரையில் சிறுமிகள் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியிடப்படப்பட்டுள்ளன.
இந்த காணாமல் போன பெண்கள் எண்ணிக்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காணாமல் போனதாக மத்திய பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். அடுத்து ஒடிசாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.
டெல்லியில் 61 ஆயிரம் பெண்கள் – சிறுமிகளும், ஜம்மு காஷ்மீரில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தில் 2019 – 2022 காலகட்டத்தில் 57,918 பெண்கள் , சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். 2019-2020இல் 19,658 பேரும், 2020-2021இல் 18,298 பெண்கள் சிறுமிகளும், 2021-2022இல் 23,964 பெண்கள் சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…