அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 1 லட்ச ரூபாய் திருட்டு.! நிர்வாகிகள் அதிர்ச்சி.!

Default Image

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகியிடம் இருந்து 1 லட்ச ரூபாய் திருடு போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் இன்று அதிமுக அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்த நிலையில் அதிமுக நிர்வாகி வைத்திருந்த 1 லட்ச ரூபாய் திருடுபோயுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்ட தெற்கு ஒன்றிய அதிமுக துணைச்செயலாளர் உச்சிமாகாளியிடமிருந்த பணம் தான் திருடபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்