தனியார் வசம் சென்ற காலை உணவு சிற்றுண்டி திட்டம்.! தீர்மானம் நிறைவேற்றம்.!

Chennai Mayor Priya Rajan - Tamilnadu CM MK Stalin

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி காலை உணவு சிற்றுண்டி திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு சுமார் 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

417 மாநகராட்சி பள்ளிகள், 163 நகராட்சி பள்ளிகள், 728 ஊராட்சி பள்ளிகள், 237 மலைவாழ் பகுதி அரசு பள்ளிகள் என மொத்தமாக சுமார் 1 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதியில் 328 அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது சென்னையில் மட்டும் காலை உணவு சிற்றுண்டி திட்டமானது தனியார் வசம் செல்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் , சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு சிற்றுண்டி திட்டமானது தனியார் வசம் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருந்தும் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் தீர்மானம் சென்னை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident