ஒரே நாளில் 2 முறை வாக்களிக்கும் குமரி மாவட்ட மக்கள்..!
காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், காலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று 2 முறை வாக்களிப்பார்கள்.