#Breaking : இந்த மாவட்டங்களில் இன்று இரவு பேருந்து சேவை கிடையாது.! பறக்கும் புதிய உத்தரவுகள்….
புயல் எச்சரிக்கை தொடர்பாக 6 மாவட்டங்களில் இன்று இரவு நேர பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், மாவட்ட தலைமை அலுவகங்கள் 24 மணிநேரமும் செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதால், வடதமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை, அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்கொள்ள இன்று தலைமை செயலர் இறையன்பு தலைமையில் அனைத்து துறை செயலர்களும் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதில் வருவாய் நிர்வாக ஆணையர் தற்போது கடலூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் , விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரத்தில் அதிகாரிகள் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இந்த 6 மாவட்டங்களில் இரவு நேர பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிறுத்தங்களில் அதிகம் பேர் கூடகூடாது எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.