மகளிர் உரிமை தொகை.! ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் விண்ணப்பம்.!
மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு 24ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குடும்பத்தலைவிகளிடம் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளில் பெறப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். அதன் பிறகு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும்,
மேலும், விண்ணப்பங்கள் விநியோகிக்கையில் ஒருநாளைக்கு எத்தனை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. யார் விண்ணப்பங்கள் வேண்டாம் என கூறினார்கள் என்பதை ஊழியர்கள் குறித்து வைத்து கொள்ள வேண்டும் எனவும் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆம் தேதி ஞாயிற்று கிழமை விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும், அதற்கு பதிலாக ஆகஸ்ட் 26ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.