பொங்கல் விடுமுறை – நள்ளிரவு வரை மெட்ரோ இயங்கும்.!
ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ நள்ளிரவு 12 மணி வரையில் மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்கு ஏற்றதாகவும், அதே போல பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்களுக்கு வசதியாகவும் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது .
அதன் படி வெளியூர் செல்வதற்கு ஏற்றதாக வரும் 13,14 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரையிலும் , வெளியூரில் இருந்து சென்னை வருவதற்கு ஏற்றதாக ஜனவரி 18ஆம் தேதியில் அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ சேவை தொடங்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.