#IStandWithSiddharth – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்… ஏன் தெரியுமா.?

Default Image

நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் சித்தார்த் சமீப காலமாக சமூக பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை அவ்வப்போது தனது பக்கத்தில் பதிவிடுவார். அதுபோல தற்போது ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சித்தார்த் சமீபத்தில் ஒரு பதிவில், ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும் யாராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும் என அவரது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதுபோல, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என குறிப்பிட்டு அந்த பதிவினை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில்,இன்று மீண்டும் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.

அதில், எனது போன் நம்பரை பாஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல்கள் போனில் வருவதாக கூறியுள்ளார். மேலும், தன்னை மிரட்டியவர்களின் கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன் என்றும் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் பதிவை தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல தரப்பினர் தங்களது பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் 71.5k ட்வீட் செய்யப்பட்டு முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்