பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்காமல் இழுத்தடிப்பதா? – அண்ணாமலை கண்டனம்!

K Annamalai

தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்காக உரிமை தருவதில் இழுத்தடிப்பு இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவரது அறிக்கையில், அனைத்துத் தரப்பு பொதுமக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்கு, இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில், பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோருக்கு, இன்னும் பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று விதிமுறை கொண்டு வந்த திமுக அரசு, அதற்கான கட்டணம் ரூபாய் 600 வசூலித்து விட்டு, உரிமம் வழங்காமல் தமிழகம் முழுவதும் சுமார் 7,000 சிறு வியாபாரிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. உரிமம் கிடைக்கப் பெறாததால், ஆலைகளிலிருந்து பட்டாசுகளைக் கொள்முதல் செய்ய முடியாமல் சிறு வணிகர்களும், பட்டாசு ஆலைகளும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரதமர் மோடி மீது இவ்வாறு குற்றம்சாட்டினால் அவரை அமலாக்கத்துறை விசாரிக்குமா? – பூபேஷ் பாகல்

பண்டிகைக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்கு  வழங்காமல், பல கோடி பட்டாசுகளை அலைகளில் முடங்க வைத்திருப்பது திமுக அரசின் உண்மையான நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. பலகோடி செலவு செய்து வீண் விளம்பரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டம் தீட்டும் திமுக அரசு, மக்களின் பண்டிகை கால வாழ்வாதாரத்தை மெத்தன போக்கில் அணுகுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, பண்டிகைக் கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து, உடனடியாக விண்ணப்பித்துள்ள பட்டாசு வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இன்னும் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைப் போராட்டத்திற்குத் தூண்ட வேண்டாம் என்று திமுக அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Porkodi Armstrong
Women In Space 2025
RIP Director SS Stanley
TN Fisherman
Telangana Govt Inner Reservation