இஸ்ரோ சுற்றுலா… பெண்கள் உடற்பயிற்சி கூடம்… சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

Chennai Coporation Budget 2024 - 2025

சென்னை மாநகராட்சிக்கான 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ரிப்பன் மாளிகையில் இன்று தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்றது. அப்போது, 82 அறிவிப்புகளை கொண்ட சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்தார்.

அதில் கல்வி, பெண்கள், தொழில் மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

கூவத்தூர் விவகாரம்.. அவதூறு பேச்சு.! ஏ.வி.ராஜுவுக்கு வக்கீல் நோட்டீஸ்.!

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்:

மருத்துவ சேவைகள்:

  • சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையத்தில் பேச்சு மற்றும் செவித்திறன் பயிற்சி போன்ற சேவைகள் அளிக்கப்படும்.
  • தாய்மார்களுக்கான மகப்பேறு சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். இம்மையத்தில் 5 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு, மகப்பேறு சிக்கல் உள்ள தாய்மார்களை தொடர்புகொண்டு ஆலோசனை வழங்குவார்கள்.
  • மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நான்காம் நிலை தொழிலாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்வதற்காக ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • நோய் பரப்பும் கொசுகளுக்கான மருந்தின் எதிர்ப்பு சக்தியை கண்டறிய ஆய்வுகூடம் அமைக்கப்படும்.

கல்வித் துறை:

  • எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா 2 சீருடை வழங்க ரூ. 8.50 கோடி ஒதுக்கீடு.
  • மாநகராட்சி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ 45 லட்சம் ஒதுக்கீடு.
  • சென்னை பள்ளியில் படித்து அதிகம் மதிப்பெண் பெற்ற 11ம் வகுப்பை சேர்ந்த 50 மாணவர்களை இஸ்ரோ போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல ரூ.10 லட்சம் ஒதுக்கீடு.
  • 255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரூ.7.46 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக காலணிகள் வழங்க ரூ.3.59 கோடி ஒதுக்கீடு.
  • பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ரூ.61 லட்சம் ஒதுக்கீடு.
  • திறமைமிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
  • 338 பள்ளிகளுக்கு ஐந்து பச்சை வண்ண பலகைகளை வழங்க ரூ.92.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 419 சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் வகையில் ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சென்னை பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்கள் பணியமர்த்த உள்ளனர்.

இதுபோன்று மேலும் சில அறிவிப்புகள்:

  • சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.2.50 கோடி மதிப்பில் கூடுதலாக 2 நாய் இனக்கட்டுப்பாடு மையங்கள் அமைக்கப்படும்.
  • மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்கப்படும்.
  • மாநகராட்சி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்களுக்கு மருத்துவ கல்வி பயிற்சி வழங்க ரூ.2 லட்சம் ஒதுக்கீடு.
  • சென்னை ராயப்பேட்டையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.
  • நடமாடும் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் கொள்முதல் செய்ய ரூ.60 லட்சம் ஒதுக்கீடு.
  • வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.45 லட்சமாக வழங்கப்படுகிறது.
  • 200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்