Valarmathi: ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழக இஸ்ரோ விஞ்ஞானி காலமானார்!
ஸ்ரீஹரிகோட்டாவில் அங்கு ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இஸ்ரோவால் ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கு கம்பீரமாக கவுன்-டவுன் கூறிய வளர்மதியின் குரல் இப்பொது அடங்கிவிட்டது என்றே சோகமான செய்தியை அறிந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர், இஸ்ரோவின் ஒலி முகமாக அடையாளம் காணப்பட்ட வளர்மதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய பல முக்கிய ராக்கெட் நிகழ்வுகளில் வர்ணனையாளராக வளர்மதி பணியாற்றியுள்ளார். 2012-ல் விண்ணில் ஏவப்பட்ட RISAT -1 திட்ட இயக்குநராக இருந்தார். கடைசியாக கடந்த ஜூலை 30ஆம் தேதி PSLV C56 ராக்கெட் ஏவப்பட்டதற்கு வளர்மதி குரல் கொடுத்திருந்தார்.