இஸ்ரோ திட்டம்: தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பு ! எங்கு தெரியுமா…!
இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரிக்கும் அனைத்து வகையான ராக்கெட்கள் மற்றும் சாட்டிலைட்களை ஆந்திரா எல்லையில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் மூலம் விண்வெளிக்கு ஏவப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியிலும் இதேபோல் ராக்கெட் ஏவுதளம் ஒன்றை அமைக்க இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசும் மாநில அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் தெறிவித்துள்ளனர். தூத்துகுடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முக்கிய காரணமாக இருப்பது என்னவென்றால், இஸ்ரோவில் பயன்படுத்தும் கிரையோஜெனிக் என்ஜின்கள் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியில் தான் உற்பத்தி செய்கின்றனர்.
அதேபோல் ஸ்ரீஹரிகோட்டாவை விட தூத்துக்குடிதான் இந்திய பெருங்கடலுக்கு மிக அருகில் உள்ளது இதன் மூலம் ஆராய்ச்சி பொருட்களை வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்ய எளிதாக இருக்கும் என்பதால் தூத்துக்குடியை தேர்வு செய்துள்ளனர்.