வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று.!
சென்னை பெருநகர காவல் துறையில் வடக்கு மண்டலத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையில் வடக்கு மண்டலத்தில் பராமரிப்பு மற்றும் தரநிலைகளின் அடிப்படையில் 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு, யானைக்கவுனி, ஏழுகிணறு, வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை, புளியந்தோப்பு, பேசின்பாலம், எம்.கே.பி.நகர், கொடுங்கையூர், செம்பியம் ஆகிய 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழ் ஆனது பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, காவல் நிலையம் வரும் மக்களை அணுகும் முறை, காவல் பதிவேடு பராமரிப்பு, வரவேற்பு மற்றும் காத்திருப்பு அறை பராமரிப்பு மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்ட நிலைகளின் அடிப்படையில் 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த 15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிசென்னை பாரிமுனையில் உள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.