இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 27001:2013 தரச்சான்று…!

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 27001:2013 தரச்சான்று.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் அவசரகால உதவி எண்களான 100, 112 மற்றும் 101 போன்ற அழைப்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவுத்தளத்தில் இதுவரை 1.12 கோடி அழைப்பு விவரங்களும், 14.5 லட்சம் காவலன் செயலி பயன்படுவோரின் தகவல்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டிஷ் ஸ்டாண்டர்ட் இன்ஸ்டிடியூஷன் இந்த நவீன ஒருங்கிணைந்த தரவுத்தளத்தின் தகவல் பாதுகாப்பு அமைப்பிற்கு ISO 27001:2013 சர்வதேச தர சான்று வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் செயல்பாட்டிற்கு இந்த சர்வதேச தரசசன்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்தில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 தரச்சான்றை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025