சாதிக்கு ஒரு சுடுகாடு என்று கட்டி அழுவது கொடுமையில்லையா? – கே.பாலகிருஷ்ணன்
குடியிருக்க மனைப்பட்டா கூட இல்லாமல் வாழ்கிற நிலையில், சாதிக்கு ஒரு சுடுகாடு என்று கட்டி அழுவது கொடுமையில்லையா? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி.
குடிநீர் மலம் கலந்த கொடுமையை கண்டித்து புதுக்கோட்டையில் நடந்துவரும் ஆர்ப்பாட்டத்தில், கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றியுள்ளார்.
அப்போது பேசிய அவர், தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டி அரசமைப்பு சட்டத்தை அமலாக்குவதும், உயர்த்திப் பிடிப்பதும் அரசு நிர்வாகத்தின் கடமை. அதை செய்வதில் அரசு தவறினால். செங்கொடி இயக்கம் அதை செய்து முடிக்கும்.
ஒடுக்குமுறைகளை ஏற்றுக் கொண்டு அமர்ந்திருப்பது அமைதி அல்ல. அது அடிமைத்தனம். எல்லோரும் சமம் என்ற நிலையை ஏற்படுத்துவதுதான் அமைதி. அதனை ஏற்படுத்துவது அனைவருக்கும் முன் உள்ள கடமையாகும்.
குடியிருக்க மனைப்பட்டா கூட இல்லாமல் வாழ்கிற நிலையில், சாதிக்கு ஒரு சுடுகாடு என்று கட்டி அழுவது கொடுமையில்லையா? என தெரிவித்துள்ளார்.