குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – நயினார் நாகேந்திரன்

Published by
லீனா

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய தமிழக முதல்வர் அவர்கள், சட்டப்படியான சமத்துவம் மற்றும் சட்டப்படியான பாதுகாப்பை எந்த அரசும் மறுக்க முடியாது என்றும், 1956 குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், ஒரு நபர் குடியுரிமை பெற மதம் என்பது அடிப்படையாக இல்லை என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம் மதசார்பின்மை கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன் அவர்கள், தமிழக முதல்வர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத நிலையில், சட்டப்பேரவையில் மதநல்லிணக்கத்தை பற்றி பேசுவது வருந்தத்தக்கது என்றும, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், அரசியலமைப்பு சட்டப்படி மத்திய அரசுக்கு மக்கள் பாதுகாப்புக்காக சட்டம் கொண்டுவருவதற்கு இடம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…

39 minutes ago

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

1 hour ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

2 hours ago

விஜய் எதிர்க்கட்சி தலைவரா? ஆதவ் அர்ஜுனா கருத்தும்.., திருமா ரியாக்சனும்…

சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…

3 hours ago

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

4 hours ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

4 hours ago