CAAவுக்கு எதிரான போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்லாமிய அமைப்புகள் முடிவு.!
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வந்தது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய பேராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், உலக முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரேனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து ஷாஹின்பாக் போராட்டங்களையும் ஒத்திவைக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள் 32 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் கைவிடப்படுவதாகவும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.