சமவெளியில் மிளகு சாதியம் என்பதை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும் ஈஷா.
இன்று 19-06.22 புதுக்கோட்டை ஆலங்குடியில் உள்ள வடகாடு கிராமத்தில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற கருத்தரங்கு மற்றும் களப் பயிற்சி ஈஷாவின் காவேரி குரல் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்குபெற்றனர்.
மிளகு சாகுபடி மலை பகுதியில் மட்டுமல்லாது சமவெளியிலும் சாத்தியம் என்பதை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்காவை சேர்ந்த பல விவசாயிகள் நிரூபித்துள்ளனர்.
முக்கியமாக பல வருடங்களாக மிளகு சாகுபடி செய்து வெற்றிகரமாக மிளகு உற்பத்தி செய்து வரும் திரு. பால்சாமி, திரு.ராஜாகண்ணு, திரு. பாக்கியராஜ், திரு. செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் ராம சிவக்குமார் மற்றும் கூடுதல் இயக்குனர் செந்தில் குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.
காவேரி கூக்குரல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ஸ்ரீ முகா அவர்கள் அனைத்து முன்னோடி விவசாயிகளையும் அதிகாரிகளையும் வரவேற்றார்.
காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் மரம் சார்ந்த விவசாயத்தினால் விவசாயிகளில் பொருளாதாரம் மேம்படுதல், மண் மற்றும் நீர் வளம் மேம்படுதல் குறித்து விளக்கினார்.
சமவெளியில் மிளகு சாகுபடி குறித்த பயிற்சியை ஈஷா கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறது. இதுவரை இப்பயிற்சியில் தமிழகம் முழுவதுமுள்ள 5,000 க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெறறுள்ளனர். அவ் விவசாயிகள் தமிழகம் முழுவதும் மிளகு சாகுபடியை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் மிளகு சாகுபடி நடந்து வருகிறது.
விவசாயிகள் தங்களது வழக்கமான பயிர்களுடன் வேலியோரங்களில் உள்ள மரங்களில் மிளகு படர விடலாம். மரப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் வருடா வருடம் வருமானம் பெற இயலும். மிளகு நட்டு 3முதல் 4 ஆண்டுகளில் மிளகு காய்க்கத் துவங்கும். 10 ஆண்டு வளர்ந்த ஒரு மிளகுகொடியில் இருந்து 10 கிலோ வரை மிளகு அறுவடை செய்ய இயலும்.
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…
சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…