எஸ்.வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது ? ஜோதிமணி முதலமைச்சருக்கு கேள்வி

Default Image

எஸ் .வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது என்று  கேள்வி எழுப்பியுள்ளார் ஜோதிமணி.

சமீபத்தில் எஸ்.வி.சேகர் அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என கூறி  வீடியோ ஒன்றை வெளியிட்டார். சேகரின் இந்த வீடீயோவிற்கு பதில் அளிக்கும் வகையில்  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் அவர் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். எஸ்.வி.சேகர் அதிமுக கொடியை அண்ணாவைக் காட்டித்தான் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அதிமுக எம்.எல்.ஏ வாக அவர் ஐந்து ஆண்டு பெற்ற சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்.தற்போது எம்.எல்.ஏ பென்சன் வாங்குகிறார். அதையும் திருப்பிக் கொடுக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிலில், நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை.சசிகலாவை சந்தித்தஇல்லை. நான் விசுவாசியல்ல. நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத்தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். MGR JJ படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா. என் MLA சம்பளம், என் ஓயூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல. என் சம்பளம் தவிர ஒரு பைசா கூட கமிஷனாக சம்பாதிக்காதவன் நான். அப்படி எத்தனை விசுவாசிகள் சொல்வீர்கள். யோசியுங்கள். புரியும். இல்லை அம்மாவின் ஆத்மா புரியவைக்கும். “மான ரோஷம்” நல்ல காமெடி என்று பதிவிட்டார்.

இதன் பின் முதலமைச்சர் பழனிசாமியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர் அளித்த பதிலில்,  நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை, அவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  ஏதாவது பேச வேண்டியது வழக்கு வந்தால் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வது எஸ்.வி.சேகரின் வழக்கம் என முதலமைச்சர்  பழனிசாமி கூறினார்.மேலும், எஸ்.வி.சேகர் அதிமுகவில் சரியாக செயல்படாததால் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எஸ்.வி.சேகர் பாஜகவில் தான் இருக்கிறாரா..? பிரச்சாரத்திற்கு வரவில்லை..?  ஸ்ரீ எங்களுக்கு ஹிந்தி தெரியும் என எஸ்.வி.சேகருக்கு எப்படி தெரியும்? என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,முதல்வர் அவர்களே அப்படிப்பட்ட எஸ் .வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது?! என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்