கொரோனா காலத்தில் மக்களை நச்சரிப்பதாகும் -மு.க.ஸ்டாலின்
ஊழலின் ஊற்றுக்கண்ணான சென்னை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் கெடுபிடிகள் ஏன்? என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வோர் அரையாண்டும் முடிந்து 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை”, “அப்படிச் செலுத்தத் தவறினால் 16-ஆவது நாளில் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும்” என்று, சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது, “வலது கையால்” ஒரு சலுகையைக் கொடுத்து விட்டு, “இடது கையால்” அதைப் பறித்துக் கொள்வது போல் அமைந்திருக்கிறது.
ஏழை எளிய, நடுத்தர மக்கள் செலுத்தும் சொத்து வரியில், “அபராதம்” விதிக்கும் கெடுபிடியும் – ஊக்கத் தொகை 15 நாட்களுக்கு மட்டுமே அளிப்போம் என்பதும், மக்கள் நலத் திட்டம் அல்ல; மக்களை நச்சரிக்கும் திட்டமே ஆகும்!
அரையாண்டு சொத்துவரியை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் 2% அபராதம் என @chennaicorp அறிவித்திருப்பது #covid19 காலத்தில் மக்களை நச்சரிப்பதாகும்!
ஊழலின் ஊற்றுக்கண்ணான சென்னை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் கெடுபிடிகள் ஏன்?
அவகாசத்தை 45 நாட்கள், ஊக்கத்தொகையை 10% என அதிகரித்திடுக! pic.twitter.com/WVkAfYIR04
— M.K.Stalin (@mkstalin) October 17, 2020