இதுதான் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா? – டிடிவி
ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட்.
ஆவின் நிறுவனம் பால் விலை உயர்வை தொடர்ந்து, நெய்யின் விலையையும் உயர்த்தியுள்ளது. இதற்க்கு அமமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர், ‘ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.
ஒரே ஆண்டில் மூன்று முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115/- வரை அதிகப்படுத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதான் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?’ என பதிவிட்டுள்ளார்.
ஒரே ஆண்டில் மூன்று முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115/- வரை அதிகப்படுத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதான் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?!(2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 16, 2022