நாட்டிற்கே பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா.? கனிமொழி கடும் கண்டனம்.!

DMK MP Kanimozhi

நாட்டிற்கே பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா.? என திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். 

இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும் பாஜக எம்பியுமான பிரித் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து, அவரை கைது செய்ய வேண்டும் என பல வாரங்களாக மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வீரர்கள் டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வீரர், வீராங்கனைகள் முயன்றனர். அப்போது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி மொத்தமாக கைது செய்தனர். 100க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் , அவர்களுடன் ஆதரவாக போராடிய 600க்கும் மேற்பட்டோர் என அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மீதான இந்த கைது நடவடிக்கை குறித்து பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனங்களை பதிவிட்டுள்ளார்.

திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், நாட்டிற்கே பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? குற்றம்சாட்டப் பட்டிருக்கும் பிரிஜ் பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், நீதி கோருபவர்களை ஒடுக்கும் மத்திய பாஜக அரசுக்கு வன்மையான கண்டனங்கள். என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்