பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது , இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பா? என ஈபிஎஸ் ட்வீட்
பாலியல் தொந்தரவு
விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை திமுக பிரமுகர் ஹரிஹரன் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்துள்ளார்.
போலீசில் புகார்
இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் அப்பெண் புகார் அளித்த நிலையில் திமுகவை சேர்ந்த 2 பேர், கூலித் தொழிலாளர்கள் 2 பேர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய தண்டனை எடுக்கப்பட வேண்டுமென எம்.பி கனிமொழி, கமலஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதான் பாதுகாப்பா?
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விருதுநகரில் இளம் பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்வை சீரழித்துள்ள கொடுஞ்செய்தி கேட்டு பெருவருத்தம் அடைந்தேன், கண்துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமில்லாமல்,திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பன்மடங்கு இந்த அரசின் கீழ் அதிகரித்திருக்கிறது , இதுதான் தாங்கள் பெண்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…