பிரதமர் பாராளுமன்றத்தில் பேசும் பேச்சா இது? – பீட்டர் அல்போன்ஸ்

Default Image

கணவருடைய பெயரைகுடும்பப் பெயராக வைப்பதுதான் இந்திய கலாச்சாரம் என்ற அடிப்படை புரிதல்கூட நமது பிரதமருக்கு இல்லையே என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். 

பிரதமர் மோடி நேற்று மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் குடும்பத்திற்கு சில கேள்விகளை எழுப்பினார்.

அதன்படி, நேரு இவ்வளவு பெரிய மனிதராக இருந்திருந்தால், அவரது குடும்பத்தில் ஏன் அவரது குடும்பப் பெயரை யாரும் பயன்படுத்தவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதுகுறித்து சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள்  பக்கத்தில், ‘கணவருடைய பெயரைகுடும்பப் பெயராக வைப்பதுதான் இந்திய கலாச்சாரம் என்ற அடிப்படை புரிதல்கூட நமது பிரதமருக்கு இல்லையே! உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் பிரதமர் பாராளுமன்றத்தில் பேசும் பேச்சா இது? பேசுவதற்கு வேறு ‘சரக்கு’ இல்லை என்றால் தரம்தாழ்ந்து பேசுவதுதானே வழி!⁦’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்