இதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா? – ஈபிஎஸ்

Default Image

சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா? என ஈபிஎஸ் ட்வீட்.

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்.ஏ வரலாறு படத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெற்றது.  அதில் சாதி பற்றி சர்ச்சை ஏற்படுத்தும் வண்ணம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நான்கு ஜாதிகளின் பெயரை வினாத்தாளில் குறிப்பிட்டு அதில் எது தாழ்ந்த ஜாதி என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த சாதிய பாகுபாடு தற்போது சர்ச்சை எழுப்பியுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ மக்களே பாரீர், ‘பெரியாரின்’ பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில், பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா?’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth