இது மோடி ஆட்சிக்கு தலைகுனிவா, இல்லையா? – கே.எஸ்.அழகிரி

Default Image

75 ஆண்டுகளில் இல்லாத அவமானம் சி.பி.ஐ.க்கு ஏற்பட்டிருக்கிறது. இது மோடி ஆட்சிக்கு தலைகுனிவா, இல்லையா? என்று கே.எஸ் அழகிரி விமர்சனம்.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்தை, அந்த நிறுவன அலுவலகத்தில் உள்ள சுமார் 72 லாக்கரில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது. அதற்கான சாவிகளும் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் தங்கம் பதிகப்பகை வைக்கப்பட்ட லாக்கர்கள் திறக்கப்பட்டது.

சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ தங்கம் மயமாகியது தெரியவந்தது. இதுதொடர்பாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்து, சி.பி.ஐ. மீது விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உயர் அதிகாரி தலைமையில் உள்மட்ட விசாரணைக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த 400 கிலோ தங்கத்தில் ரூ.45 கோடி மதிப்புள்ள 103 கிலோ தங்கம் மாயம். சி.பி.ஐ. மீது விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 75 ஆண்டுகளில் இல்லாத அவமானம் சி.பி.ஐ.க்கு ஏற்பட்டிருக்கிறது. இது மோடி ஆட்சிக்கு தலைகுனிவா, இல்லையா? என்று விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்