ஆம்பள யாரும் இல்லையா? பெண்களிடம் கீழ்த்தரமாக பேசிய பாமக எம்.எல்.ஏ அருள்!
முத்துநாயகன்பட்டியில் பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தையின்போது அங்கிருந்த பெண்களை பார்த்து பாமக எம்.எல்.ஏ அருளின் அநாகரீகமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் : மாவட்டத்தில் முத்துநாயகன்பட்டியில் உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பலரும் ஒன்றாக இணைந்து கொண்டு பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தியபோது சில பெண்கள் கதறி அழுதுகொண்டு உள்ளார்கள்.
அப்போது பாமக எம்.எல்.ஏ அருள் திடீரென மிகவும் கோபமடைந்து அங்கிருந்த பெண்களுக்கு முன் உங்களுடைய வீட்டில் ஆம்பள இல்லையா? எதற்காக இங்கு வரவில்லை என்பது போல மிகவும் கீழ்த்தரமாக பேசினார்.அவர் பேசியதை பார்த்து சில பெண்கள் தங்களுடைய கைகளையும் பாவமாக கும்பிட்டுள்ளனர். இருப்பினும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ அருள் கீழ்தரமாகவே பேசிக்கொண்டு இருந்தார்.
இந்த சம்பவம் நடந்தபோது அங்கிருந்த ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்த் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்ட நிலையில், வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் பாமக எம்.எல்.ஏ அருளின் கீழ்த்தரமான பேச்சு எனவும், பெண்களிடம் எப்படி பேசவேண்டும் என்று கூடவா தெரியாது? எனவும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.