நீலகிரியில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்ததா கொரோனா.?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும், தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் கடந்த வாரத்தை காட்டிலும் இருமடங்கை விட அதிகரித்து உள்ளன.
தமிழகத்தில் கொரோனா இல்லாத மாநகராட்சியாக அண்மையில் தெரியவந்த நீலகிரியில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது புதியதாக 9 பேருக்கு அம்மாவட்டத்தில் கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.