கரும்பு விவசாயி சின்னத்துக்கு சிக்கல்? வழக்கு தொடர முடிவு – சீமான் பரபரப்பு பேட்டி!

seeman

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது.

இந்த சூழலில் தான், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதனால் சீமான் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

தமிழகத்தில் முதல் மினி டைடல் பூங்கா! ரூ.1,264 கோடி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

இந்த நிலையில், கரும்பு விவசாயி சின்னம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது, சட்டத்தின் படி, சட்ட வரைமுறையின்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்டிருக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே திட்டமிட்டே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.  சின்னத்தை வழங்க மறுப்பது என்பது எனக்கு அழுத்தம் தரும் முயற்சி. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் என 6 தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம்.

சின்னத்தை பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில் உடன்பாடு எட்டவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். புதிய சின்னம் அறிவிக்கப்பட்டாலும் தற்போதைய அறிவியல் உலகத்தில் அதனை சேர்ப்பது கொண்டு என்பது ரொம்ப எளிதானது. ஆனால், நிச்சயமாக கரும்பு விவசாயி சின்னத்தை பெறுவோம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்