பேருந்து இயக்கம் உண்டா? எப்போது? எங்கு? – போக்குவரத்து துறை அதிகாரி தகவல்!
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளின் இயக்கம் எப்போது?, எந்தெந்த இடங்களில் இயங்கும் என போக்குவரத்துக்கு துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், இந்த வைரஸ் அச்சுறுத்தலால் பல நாடுகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அது போல இந்தியாவிலும் கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே பேருந்துகளும் இயக்கப்படாமல் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வைரஸின் தாக்கம் குறையாததாலும் மக்கள் அவதிப்படுவதாலும் சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக பேருந்து இயக்கமும் உள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை, சேலம் ஆகிய இடங்களில் சில மாவட்டங்கள் கொரோனா இல்லாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்கள் சிலவற்றிற்கு மட்டும் சேவையை தொடங்க ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், கொரோனா அதிகம் பாதித்துள்ள இடமாகிய சென்னைக்கு தற்பொழுது பேருந்து சேவை பற்றி யோசிக்க கூட இல்லை எனவும், அதற்க்கு காலதாமதம் ஆகும் எனவும் கூறியுள்ளார்.
இன்னும் இரு தினங்களில் கொரோனா மாவட்டங்களுக்கு முன் எச்சரிக்கையுடன் பேருந்தை இயக்க அனுமதி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.