மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கை கடிகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரூ.5 லட்சம் மதிப்பு என்று கூறப்படும் கை கடிகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த கடிகாரத்தின் ரசீது கேட்டு திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தான் வாங்கிய கை கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தெரிவித்திருந்தார்.
எந்த கடையில் வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது என வங்கி விவரம் அல்லது ரசீது போன்ற விவரத்தை வெளியிட வேண்டும். கை கடிகாரம் யார்கிட்டையோ வெகுமதி வாங்குனது, இதனால் தான் கை கடிகாரம் வாங்கிய ரசீதை அண்ணாமலையால் வெளியிட முடியவில்லை என்றும் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது ட்விட்டர் பக்க பதிவில், பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். இதற்கு ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர், ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது என சினிமா பாணியில் விமர்சித்துள்ளார்.
ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…