அரசு இயந்திரம் முதல்வரின் கட்டுப்பாட்டிலே இல்லையா? சசிகலா சரமாரி கேள்வி..!
தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா அறிக்கை.
தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் தை மாத மாற்றப்போல் வரும் செய்டுகள் உண்மைதானா? என்ற கேள்வி எல்வோருக்கும் எழுகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வந்ததாக தெரியவில்லை பின் ஏதற்காக, இது. போன்ற செய்டுகள் பரப்பப்படுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது அதேபோல் கடந்த வாரத்தில் மதுரை ஜெய்ஹிந்தியாத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று முன்னாள் முதல்வர் அவர்களின் படம் வைத்த செய்திகள் பின்னர் மறுநாளே அகற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.
இது போன்ற செயல்கள் தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிந்து தான் நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமலேயே எதாவது ஒரு அதிகாரம் மையத்தின் தலையீட்டால் நட்க்கிறதா? அல்லது அரசு இயந்திரம் முதல்வரின் கட்டுப்பாட்டிலே இல்லையா? என்ற அடுக்கடுக்கான கேள்விகாமமக்களுக்கு தொடர்ந்து எழுவதாக சொல்கிறார்கள்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்ப் புத்தாண்டு பதற்காக சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதற்கு சரியான விளக்கத்தை ஆதாரங்களுடன் அன்றே தெரிவித்து இருக்கிறார். அதை சரியாக புரிந்து கொண்டாலே போதும், மக்களை குழப்புபவர்களும் தெளிவடைவார்கள் எனவே இது போன்று மக்களுக்கு உதவாத செயல்களில் ஈடுபடுவதில் தங்கள் நேரத்தை செல்விடுவதை தவிர்த்து குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வழி வகை செய்தாலே போதும் அதுவே மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஆகையால், தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தை செலவழித்து. மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.