குட்நீயூஸ்..!அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படுகிறதா..?
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக தலைமையிலான அரசு, 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு,அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது.அதில்,குடும்ப ஓய்வூதியம் கிடையாது உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
இதனையடுத்து,புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டம் நடத்தினர்.ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில்,அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்தலாமா?,என்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது.இந்தக் குழு வழங்கும் அறிவுறுத்தலின் படி,புதிய ஓய்வூதிய திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் ரத்து செய்வார் என்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.
முன்னதாக,திமுக ஆட்சிக்கு வந்தால்,புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என,முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.