மக்களுக்கு துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நிதிகளை அறிவித்து வருகிறது.இதற்கு இடையில் தான் மத்திய அரசு தான் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.அதாவது,எம்பிகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்துவதாக அறிவித்தது.அதாவது 2020-2021 மற்றும் 2021- 2022 ஆண்டுகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எம்பிக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஈராண்டுகளுக்கு எம்பிகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஏற்கனவே நிறுத்தப்பட்ட நிலையில் 2019-20 க்கான நிதியையும் ரத்து செய்யும் மத்திய அரசின் முயற்சி மக்களாட்சிக்கு மாறானது. எதிர்க்கட்சி எம்பிக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா? மக்களுக்கு துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…