ஐடி துறை, அடியாள் துறையானதா? – கே.பாலகிருஷ்ண

Default Image

நாடு முழுவதும் மோடி ஆட்சியின் வன்முறை தாண்டவத்தை ஆவணமாக்கியது பிபிசி என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். 

டெல்லியில் உள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து  சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, பிபிசி செய்தி நிறுவனமானது,  2002 குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்து இருந்த நிலையில், மத்திய அரசு பிபிசி மீது இப்படி ஒரு ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

CPM State Secretary K. Balakrishnan
 இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், குஜராத்திலும், நாடு முழுவதும் மோடி ஆட்சியின் வன்முறை தாண்டவத்தை ஆவணமாக்கியது பிபிசி. இப்போது அதன் தில்லி அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு, ஊழியர்களுக்கு மிரட்டல். ஐடி துறை, அடியாள் துறையானதா?.

உள்நாட்டு ஊடகங்களின் மீதான அடக்குமுறை தர்பாரில் உலக ஊடகமும் தப்பவில்லை. மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியாவை, கேலிக்கூத்தாக்குது மோடி கூட்டம் என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்